அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான குரல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் மாந்திரீகர்கள் மற்றும் சூனியக்காரர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ட்ரம்ப் பதவி விலகவேண்டும் என்பதற்காக ஒரு பூஜையை நடத்தியுள்ளனர். உலகளாவிய ரீதியில் உள்ள மாந்திரீகர்களும் இந்தப் பூஜையில் தத்தமது நாடுகளில் இருந்தபடியே கலந்துகொண்டுள்ளனர்.

நான்கு கட்டங்களாக நடத்தப்படவுள்ள இந்தப் பூஜையின் முதற்கட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சூனியக்காரர்களாகக் கருதப்படும் பலர் கலந்துகொண்டனர். பெரும் செலவில் இந்தப் பூஜை மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
தாம் எடுக்கும் இந்த முயற்சி விளையாட்டுத்தனமானது அல்ல என்றும், இந்தப் பூஜையின் பலனாக ட்ரம்ப் உடனடியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் பூஜையை நடத்திய சூனியக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பூஜையின் அடுத்தடுத்த கட்டங்கள் மார்ச் 26, ஏப்ரல் 24 மற்றும் மே 23ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சூனியம் மற்றும் மாந்திரீகம் என்பனவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் யாரும் இதில் கலந்துகொள்ளலாம் என்று கூறும் இவர்கள், பூஜைகளை நடத்துவதற்கான வழிமுறைகளை இணையதளம் வழியாக விளக்கம் அளித்தும் உள்ளனர்.