Header Ads

வன்னி பகுதியில் புத்தர் சிலைகளை கண்டம் துண்டமக்குவது இவர்களா ? சிங்களவர்களுக்கு பெரும் நெருக்கடி

வடக்கில் புத்தர் சிலைகளை உடைப்பவர்கள் தமிழர்கள் தான் என்று தவறான பிம்பங்கள் உருவாக்கப்படுவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 


சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதன் பின்னணியில் செயற்படும் சூத்திரதாரிகளைக் கண்டறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த சிலை உடைப்பின் பின்னணியில் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என தவறான விம்பமொன்று சமூக வலைத்தளங்களில் தோற்றுவிக்கப்பட்டுவருகிறது. வடமாகாணத்திலுள்ள பௌத்த விகாரைகளுக்கும்,


புத்தர் சிலைகளுக்கும் தாக்குதல் நடத்தப்போவதாகவும், அவை அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருப்பதாகவும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதேவேளை அண்மைக்காலமாக வடக்கிலுள்ள புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட விடயங்ளுக்குப் பின்னால் தென்னிலங்கையில் செயற்பட்டுவரும் குழுவொன்றே அதனைச் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 


இதனை தடுப்பதற்கும், இக்குழுவினரைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.