Header Ads

லண்டனில் நாம் கட்டும் டாஸ் பணத்தை எப்படி செலவு செய்கிறார்கள் பார்த்தீர்களா ?



பிரித்தானியாவில் தமிழர்கள் மட்டும் அல்ல. யார் வேலை செய்தாலும் 20 விகிதம் டாக்ஸாக போகிறது. வருமானத்தில் நாம் பெரும் பகுதியை டாக்ஸாக கட்டி வருகிறோம். இன் நிலையில் அந்த வரிப் பணத்தில் பலர் ஜாலியாக இருக்கிறார்கள். இவர்களில் முதல் இடம் காருக்கு டிக்கெட் வைக்கும் வார்டன் தான் என்கிறது பிரித்தானியாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று. இவர்கள் கவுன்சிலுக்காக வேலை பார்பதால் இவர்களுக்கு அரசாங்க ஏஜன்சிக்கான கிரெடிட் கார்ட் கொடுக்கப்படுகிறது. வெய்யில் காலங்களில் தமக்கு , சூரியன் படுகிறது என்று சொல்லி கிரீம் வாங்க என இவர்கள் பல நூறு பவுண்டுகளை செலவு செய்வதும்.

குளிர் காலங்களில் கையுறை வாங்க வேண்டும்.  வேறு பொருட்கள் வாங்கவேண்டும் என்று கூறி இவர்கள் தமக்கு வழங்கப்பட்ட கிரேடிட் கார்டை மிகவும் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது கூட பரவாயில்லை. குடி பாணங்கள் வாங்க. இரவு நேர கழியாட்ட விடுதி(நைட் கிளப்) செல்ல , இதற்கு கூட இவர்கள் இதே கடன் அட்டையை தான் பாவிக்கிறார்கள்.

வரும் ஒன்றுக்கு 3,000 பவுண்டுகளை இவர்கள் இவ்வாறு , தமக்கு வழங்கப்பட்டுள்ள கடன் அட்டையில் செலவு செய்வதாகவும். இது அரசாங்க கணக்கில் இருந்தே செல்வதாகவும் கூறப்படுகிறது. திறை சேரியும் இதனை பெரிதாக கண்டுகொள்வது இல்லை. எமது வரிப்பணத்தில் இவர்கள் லூட்டி அடிக்கிறார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.