Header Ads

அமெரிக்க செனற் சபையின் நம்பிக்கை நட்சத்திரமாக ஈழ தமிழ் யுவதி இவர் தான்



சரியாக பயன்படுத்தினால் , இவர் ஊடாக பல செயல்பாடுகளை ஈழத் தமிழர்கள் செய்ய முடியும் என்கிறார்கள் சிலர். யார் இந்தப் பெண் ?

அமெரிக்க செனற்றர் கமலா ஹரிஸ்ஸின் அலுவலக செயலணியின் பிரதி தலைமை அதிகாரியாக புலம்பெயர் ஈழ தமிழ் யுவதி ரோஹிணி லக்ஷ்மி இரவிந்திரன் கடமையாற்றுகின்றார். இவர் அமெரிக்க சட்டவாக்கம் மற்றும் கொள்கை வகுப்பில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்.

செனற் சபையில் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் உடையவர். இவருக்கு இந்நியமனம் கடந்த வருட இறுதியில் வழங்கப்பட்டது. நாடாளுமன்றம் சம்பந்தப்பட்ட ஆழமான அறிவு, எடுக்கின்ற காரியத்தை திறம்பட செய்து முடிக்கின்ற செயல் திறன் ஆகியவற்றை உடைய ரோஹிணிக்கு இந்நியமனத்தை வழங்குவதில் பெருமை அடைவதாக கமலா ஹரிஸ் தெரிவித்து இருந்தார்.

ரோஹிணி இதற்கு முன்னர் செனற்றர் Michael Bennet இன் சிரேஷ்ட ஆலோசகராகவும், கொள்கை வகுப்பு பணிப்பாளராகவும் கடமையாற்றினார். அதற்கு முன்னர் செனற்றர் Debbie Stabenow இன் அலுவலர்களில் முக்கியமான ஒருவராக இவர் விளங்கினார்.செனற் சபையில் முக்கியமான சட்டங்களை உருவாக்குவதில் மிக காத்திரமான பங்களிப்பு வழங்கி உள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.