கொட்­டாஞ்­சே­னையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்­தப்­பட்டு காணாமல் போகச்­செய்­யப்­பட்ட வடிவேல் பக்­கி­ளி­சாமி லோக­நாதன், இரத்­ன­சாமி பர­மா­னந்தன் ஆகி­யோரின் விவ­கா­ரத்­துடன் நேர­டி­யாக தொடர்புபட்­ட­தாக சந்­தே­கிக்­க­ப்படும்  கடற்­ப­டையின் லெப்­டினன் கொமாண்டர் தர அதி­கா­ரி­யான தயா­நந்­தவைக் கைது செய்ய விடாமல் மேல் மாகா­ணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேன­நா­யக்­கவே தடை­களை ஏற்­ப­டுத்­தி­ய­தாக இக்­க­டத்தல் தொடர்பில் ஆரம்­பத்தில் விசா­ரணை செய்த விசா­ரணை அதி­கா­ரிகள் குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வுக்கு வாக்கு மூலம் அளித்­துள்­ளனர். 
கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவே இது தொடர்பில் ஆரம்­பத்தில் விசா­ரணை செய்த நிலையில் அப்­போது விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பொலிஸ் பரி­சோ­த­க­ரான சமந்த குல­ரத்ன, தற்­போ­தைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதி­சிங்க ஆகி­யோரே இவ்­வாறு வாக்கு மூலம் வழங்­கி­யுள்­ள­தா­கவும் அதன்­படி எதிர்­வரும் 28 ஆம் திகதி விளக்­க­ம­றி­யலில் உள்ள அநுர சேன­நா­யக்­க­விடம் விசேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வாக்கு மூலம் பதிவு செய்­ய­வுள்­ள­தா­கவும் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் கூட்­டுக்­கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியும் சிறப்பு விசா­ரணை அதி­கா­ரி­யு­மான நிசாந்த சில்வா கொழும்பு மேல­திக நீதிவான் ஜயராம் டொஸ்­கிக்கு நேற்று அறி­வித்தார்.
2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 11 ஆம் திகதி கொட்­டாஞ்­சே­னையில் இருந்து வெல்­லம்­பிட்­டிய பகு­தியை நோக்கி தனது பீ.ஏ.6023 என்ற இலக்­கத்தை உடைய வேனில் பய­ணித்த போது கடத்­தப்­பட்ட வடிவேல் பக்­கி­ளி­சாமி லோக­நாதன் மற்றும் உறவி­ன­ரான பொரளை, வனாத்­த­முல்­லையைச் சேர்ந்த இரத்­ன­சாமி பர­மா­னநந் தன் ஆகி­யோ­ரது கடத்தல் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியும் கடத்­தல்கள் தொடர்­பி­லான சிறப்பு விசா­ர­ணை­யா­ள­ரு­மான  பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா  இதனை நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.
இதன் போது அவர் பொலிஸ் பரி­சோ­தகர் இலங்­க­ சிங்­க­வுடன் இணைந்து நீதிவான் ஜெயராம் டொஸ்­கி­யிடம் சிறப்பு மேல­திக அறிக்­கை­யொன்­றையும் சமர்­ப்பித்தார்.
 இதன் போது நீதி­மன்றில் சிறப்பு விசா­ர­ணை­யாளர் நிசாந்த டி சில்வா தெரி­வித்­த­தா­வது,
'கனம் நீதிவான் அவர்­களே, இந்த விவ­காரம் தொடர்பில்  ஆரம்­பத்தில் சி.சி.டி. யே விசா­ரணை செய்­தது.  இது குறித்து நாம் அப்­போது கொழும்பு குற்­றத் ­த­டுப்புப் பிரிவு (சி.சி.டி)யில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பொலிஸ் பரி­சோ­தகர் சமந்த மற்றும் தற்­போ­தைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதி­சிங்க ஆகி­யோரை விசா­ரணை செய்து வாக்கு மூலம் பெற்றோம்.
காணாமல் போன இரு­வரின் தொலை­பே­சி­களை கடற்­படை லெப்­டினன் கொண்டர் தயா­னந்­தவே பயன்­ப­டுத்­திய நிலையில், அதற்­காக அவர்­களை கைது­செய்ய சென்ற போது முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேன­நா­யக்க தம்மை தடுத்து விசா­ர­ணை­களை நிறுத்­தி­ய­தாக அவர்கள் தெரி­வித்­தனர்.
 இந் நிலையில் வரும் 28 ஆம் திகதி நாம் அநுர சேன­நா­யக்­க­விடம் இது குறித்து விசா­ரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்­ய­வுள்ளோம்.
இத­னை­விட கடற்­படை லெப்­டினன் கொமாண்டர் தயா­நந்­தவை பல­முறை நாம் விசா­ர­ணைக்கு அழைத்தும் அவர் வர­வில்லை. தற்­போது பயிற்சி நட­வ­டிக்கை ஒன்றில் அவர் இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் இரு வாரத்­துக்குள் அவர் ஏதேனும் ஒரு தினத்தில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் முன் ஆஜ­ராக உத்­தர­விட வேண்டும்.' என்றார்.
புல­னாய்வுப் பிரிவின் கோரிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளித்த நீதிவான் ஜெயராம் டொஸ்கி, வழக்கை எதிர்­வரும் மார்ச் 9 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.
முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரண்­ணா­கொட கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி தனது தனிப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரான லெப்­டினன் கொமாண்டர் முன­சிங்க ஆரச்­சிகே தொன் நிலந்த சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக செய்த முறைப்­பா­டா­னது மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக முன்னாள் பொலிஸ் மா அதி­ப­ரினால் 2009 ஜூன் 10 ஆம் திகதி பொலிஸ் மா  குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.
இந் நிலையில் நாம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் சம்பத் முன­சிங்­கவின் கீழ் இருந்த கரண்­ணா­கொ­டவின் பாது­காப்பு அணியில் இருந்த  லெப்­டினன் கொமாண்டர் ஹெட்­டி ­ஆ­ராச்சி முதி­யன்­ச­லாகே சந்­தன பிரசாத் ஹெட்டி ஆராச்­சியின் கீழான குழுவே இந்த கடத்­தல்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தமை தெரி­ய­வந்­தது. 
எல­கந்த, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13, தெஹி­வளை - பெர்­னாண்டோ வீதி, கட்­டு­நா­யக்க விமான நிலையம் உள்­ளிட்ட பகு­தி­களில் இருந்து பல்­வேறு உத்­தி­களை பயன்­ப­டுத்தி இக்­க­டத்­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
சூசைப்­பிள்ளை அமலன் லியோன், ரொஹான் ஸ்டென்லி லியோன், கஸ்­தூரி ஆரச்­சிகே எண்டன், கஸ்­தூரி ஆரச்­சிகே ஜோன் ரீட், ரஜீவ் நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஷ்­வரம் ராம­லிங்கம், மொஹ­மட்­டிலான் ஜமால்டீன், சாஜித் மொஹம்மட், அலி அஸ்வர் அல்­லது ஹாஜியார் ஆகிய 11 பேர் கடத்­தப்ப்ட்டு திரு­கோ­ண­மலை கடற்­படை முகாம் வளா­கத்தில் உள்ள கடல் மற்றும் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீடத்தின் அருகே உள்ள கன்சைட் எனும் நிலத்­தடி சிறைக் கூட்டில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.கொமாண்டர் ரண­சிங்க சுமித் ரண­சிங்க என்­ப­வரின் கீழ் இருந்த அந்த சிறையில் சட்ட விரோ­த­மாக மனித உரி­மைகள் மீறப்­படும் வண்ணம் இவர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
இந் நிலையில் கடந்த 2008 ஆகஸ்ட் 9ம் திகதி 38/28 ரட்ணம் வீதி கொட்­டாஞ்­சேனை எனும் முக­வ­ரியைச் சேர்ந்த கஸ்­தூரி ஆராச்­சிகே ஜோன் ரீட் கடத்­தப்­பட்ட போது அவ­ரது 56 - 5536 எனும் டொல்பின் ரக வானும் எடுத்துச் செல்­லப்பட்­டி­ருந்­தது. இந்த வேனா­னது கடற்­படை இலக்­கத்­த­கட்­டுடன் 6021 எனும் இலக்­கத்தின் கீழ் திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இதனை புல­னாய்வுப் பிரி­வினர்  கடந்த 2015 நவம்பர் 18 ஆம் திகதி கைப்­பற்­றினர்.. தற்­போது அந்த வேன் திரு­கோ­ண­மலை குற்றப் புல­னாய்வுப் பிரிவு அலு­வ­ல­கத்தில் உள்­ளது.இந்த வாக­னத்தின் கத­வுகள் வெலி­சறை கடற்­படை முகாமின் உளவுப் பிரி­வுக்குச் சொந்­த­மான இர­க­சிய அறை ஒன்றில் இருப்­ப­தாக மேல­திக விசா­ர­ணை­களில் புல­ன­ாய்வுப் பிரி­வுக்கு  தகவல் கிடைத்­தது. அதன்­படி  நீதி­மன்ற உத்­த­ரவைப் பெற்று அங்கு தேடுதல் நடத்­தினர்.
2016 பெப்­ர­வரி 11 ஆம் திகதி நாம் செய்த சோத­னையில் 72 துண்­டு­க­ளாகப் பிரிக்­கப்­பட்ட வாகனம் மீட்­கப்­பட்­டது. அத்­துடன் அந்த அறையில் சீ.ஜீ 125 ஈ - 1810450 எனும் எஞ்சின் இலக்­கத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. 37 ஆவது துண்டில் இருந்து வான் ஒன்றின் செஸி இலக்கம் இர­சா­யனப் பகுப்­பாய்வு மூலம் கண்­ட­றி­யப்­பட்­டது. அதுவே காணாமல் போன வடிவேல் லோக­நாதன் என்­ப­வ­ருக்கு உரி­யது என்­பது அப்­போதே தெரி­ய­ வந்­தது. 
இத­னை­ய­டுத்தே கொழும்பு குற்­றத் ­த­டுப்புப் பிரி­விடம் இருந்த  லோக­நாதன் மற்றும் அவ­ருடன் வேனில் வெல்­லம்­பிட்டி நோக்கிப் பய­ணிக்கும் போது காணாமல் போன ரத்­ன­சாமி ஆகியோர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை புல­னாய்வுப் பிரி­வினர் ஆரம்­பித்­தனர்.
இதன் போது பரமாநந்தன் பயன்படுத்திய தொலைபேசியில் 0773952046 எனும் இலக்க சிம் அட்டை உட்செலுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளமை எமி இலக்கம் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கையடக்கத் தொலைபேசியானது பஸ் ஒன்றில் விழுந்து கிடந்ததாககூறி கடற்படை வீரர் ஒருவரினால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கையளிக்கப்பட்டுள்ளது.  அதனை இவ்வாறு வேறு இலக்கத்தில் பயன்படுத்தியவர் தற்போதையை லெப்டி
னன் கொமாண்டர் தயாநந்த என்பது எமது விசாரணைகளில் தெரியவந்தது. 
அதற்கு மேல் அந்த விசாரணை இடம்பெறாது அவை மூடி மறைக் கப்பட்டுள்ளன என்பது புலனாய்வுப் பிரிவி னரால் கண்டறியப்பட்டமை குறிப்பிட த்தக்கது.