Header Ads

ஐ.எஸ்.ஸிடமிருந்து விடுதலை பெற்ற பெண்கள் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்திய மகிழ்ச்சி! (காணொளி)

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கிராமப் பெண்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. இந்தக் காணொளி எந்தப் பகுதியில் பதிவுசெய்யப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அறியத்தரப்படவில்லை. 


இந்தக் காணொளியில் முஸ்லிம் பெண்ணொருவர் தனது பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, தனது முகத்திரையைக் கழற்றி நிலத்தில் எறிந்து காலால் மிதிப்பதையும், மற்றொரு பெண் அதற்குத் தீவைப்பதும் பதிவாகியுள்ளது. மற்றொரு பெண் சந்தோஷ மிகுதியில் சிகரெட்டும் புகைக்கிறார். 


குர்திஷ் கூட்டுப்படைகள் அந்தக் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் சிலருக்கு பழம் முதலிய பரிசுப் பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் காட்சியும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஆரவாரித்து நடனமாடும் காட்சியும் பதிவாகியுள்ளன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.