Header Ads

ஓ.பி பன்னீர் செல்வம் வீட்டுக்கு கல் எறி: என்ன செய்வது என்று தெரியாத அனாதை ஆகினார்



ஏற்கனவே நாம் அதிர்வில் எழுதி இருந்தோம். பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியை இழந்து அல்லாடப்போகிறார் என்று. அதுவே நடந்துள்ளது. கட்சி தலைமையை எதிர்த்தால், அது முதலவராக இருந்தாலும் ஆபத்து என்பதனை இது உணர்த்தியுள்ளது. சசி கலா பக்கம் 125 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும். அவர்களை வளைத்துப் போட்டு விடலாம் என்று நினைத்த பன்னீர் மண் கவ்வியுள்ளார். இறுதியாக , சசி கலா சொன்ன எடப்பாடி பழனிச் சாமியே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இன் நிலையில் பன்னீர் செல்வம் வீட்டு ஜன்னல் கதவுகள் அனைத்தும் உடைந்துள்ளது. இனந்தெரியாத சிலர் கல் எறிந்துள்ளார்கள். இதேவேளை , அவரது ஆதரவாளர் சிலரை அவ்விடத்தில் வைத்து தாக்கியும் உள்ளார்கள். இது இவ்வாறு இருக்க பன்னீரின் ஆதரவாளர் சிலர் டெல்லி சென்று, தேர்தல் ஆணையாளரை சந்தித்து, சசிகலா கட்சி பொதுச் செயலாளராக இருப்பது செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று லாபி செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.