Header Ads

வானத்திலிருந்து வீட்டு கூரை மீது விழுந்த மர்ம பொருள்- கனடாவில் சம்பவம்

கனடாவில் வானத்திலிருந்து வீட்டு கூரையை உடைத்து பெரிய பனிக்கட்டி போன்ற பொருள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவின் Alberta மாகாணத்தில் உள்ள Calgary நகரில் உள்ள ஒரு வீட்டில் Theresa Couch என்னும் பெண் தன் கணவருடன் வசித்து வந்தார். 


சம்பவத்தன்று, கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்கள் வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து அறையில் மிக பெரிய அளவில் குண்டு வெடித்தது போல அவர்களுக்கு சத்தம் கேட்டுள்ளது. உடனே இருவரும் அங்கு போய் பார்த்துள்ளனர். 


அந்த அறையின் கூரையை உடைத்து கொண்டு ஒரு பெரிய கட்டி போன்ற பொருள் உள்ளே விழுந்திருந்தது. Theresa உடனே தீயணைப்பு துறைக்கு போன் செய்துள்ளார். அங்கிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அந்த பொருளை சோதனை செய்து பார்த்த போது அது பெரிய பனிக்கட்டி துண்டு என தெரிந்தது. அவர்கள் வீட்டு கூரை மேல் போன விமானத்திலிருந்து அது விழுந்திருக்ககூடும் என அவர்கள் தெரிவித்தனர். 


இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் படவில்லை எனவும் Calgary நகரில் இப்படி நடப்பது இது தான் முதல் முறை எனவும் அவர்கள் கூறினார்கள்.

1 comment:

  1. It is ice fell from flight. It has been confirmed. Please check 680news.com

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.