Header Ads

ஆண் உறுப்பை குறட்டினால் நசித்து ஆணியைச் சொருகினர்: யாழில் பொலிசார் கொடூரம் !




முழங்காலில் இருத்தி , இரு கைகளையும் கால்களுடன் இணைத்து கட்டி , இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி தூக்கி உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள்.
உயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை. என யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.

அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த  8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள்  மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.

அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட  8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த வழக்கின் சித்திரவதை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது  சாட்சி பதிவுகள் ஆரம்பமானது. அதில் குறித்த வழக்கின் முதலாவது சாட்சியமான இராசதுரை சுறேஸ் என்பவரது சாட்சி பதியப்பட்டது. காலில் ஆணி அடித்து  மர்மஉறுப்பை  குறட்டால் நசித்தார்கள் என்று ஒருவர் சாட்சியமளித்துள்ளார். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.