லண்டனில் தீவிரவாதியா ? தலை தெறிக்க ஓடிய சில பொதுமக்கள் நடந்தது என்ன தெரியுமா
லண்டனில் அதிரடிப்படை பொலிசார், சில உணவு விடுதிகளை முற்றுகையிட்டு அங்கே பயங்கரவாத தாக்குதல் நடந்தால் அதனை எப்படி சமாளிப்பது என்று ஒரு பயிற்ச்சியை எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் அங்கே நின்றிருந்த பொதுமக்களோடு ஏற்கனவே பேசி இதனை புரியவைத்திருந்தார்கள். அதற்கு அமைவாக லண்டனில் உள்ள பேர்கர் கிங் ஒன்றில், நண்டூஸ் , என்று சில உணவு விடுதியில் இது நடந்தது.
ஆனால் இதனை அறியாமல் அங்கே திடீரென வந்த சில பொதுமக்கள் , குலை நடுங்கிப் போனார்கள். ஏதோ பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதாகவும். அதனை தடுக்க பொலிசார் வந்துள்ளதாகவும் அவர்கள் நினைத்து. அங்கிருந்து தலை தெறிக்க ஓடியுள்ளார்கள். பின்னர் பொலிசார் அவர்களை அணுகி நிலமையை எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்