Header Ads

ஈராக்கில் தொடர்ந்து அதிரடி தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் பலி 40 பேர் சின்னாபின்னம்

சோதனை சாவடிக்கருகில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சிக்கி, சுமார் 15 பேர் வரையில் இறந்துள்ளதுடன், 40 பேர் வரையில் காயமுற்றுள்ளதாக ஈராக்கிய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 


மேலும் குறித்த தீவிரவாத தாக்குதலானது ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அருகிலுள்ள சோதனை சாவடியில் நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த கோர தாக்குதலில் சோதனை சாவடிக்கருகில் நின்ற வாகனங்களில் இருந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 15 பேர் உடல் கருகி இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு குறித்த தாக்குதல் காரணமாக காயமடைந்த சுமார் 40 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, தாக்குதல் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. 


கடந்த சில தினங்களுக்கு முதல், அந்நாட்டின் வடக்கு மொசூலில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை இராணுவத்தினர் வெற்றிகொண்ட நிலையில், தற்போது தெற்கு பகுதியில் குறித்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.