Header Ads

20 பவுண்டு தாளால் லண்டனில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த பகீர் சம்பவம்

பிரித்தானியாவில் தரையில் கிடந்த 20 பவுண்டு தாளால் இளம்பெண் ஒருவர் மீது திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Blurton பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள One Stop அங்காடியில் அமைந்துள்ள ஏ.டி.எம் மையத்தில் இருந்து நபர் ஒருவர் பணம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


அதில் 20 பவுண்டு தாள் ஒன்று அவரை அறியாமல் தொலைந்ததாக கூறப்படுகிறது. குறித்த நபர் தொலைந்த பணத்தை அப்பகுதியில் தேடியுள்ளார். ஆனால் அவருக்கு அந்த 20 பவுண்டு தாள் கண்ணில் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே நிக்கோல் பெய்லி (23) என்ற இளம்பெண் 20 பவுண்டு தாளை அந்த அங்காடியின் ஒருபகுதியில் இருந்து கண்டெடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த இளம்பெண்ணை விசாரணைக்காக அழைத்த பொலிஸ் 20 பவுண்டு தாள் விவாகரம் குறித்து விசாரித்துள்ளது. முதலில் மறுத்த அவர், 


பொலிசார் காண்பித்த காணொளி காட்சி ஆதாரத்தால் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது திருட்டு குற்றம் சுமத்திய பொலிசார், அபராதமாக நீதிமன்றத்திற்கு அவரை 175 பவுண்டு செலுத்தவும் வலியுறுத்தியுள்ளது. இதுவரை எந்த குற்ற வழக்கிலும் சம்பந்தப்படவில்லை என்பதால் மட்டும் குறித்த இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 


இதனைடையே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸ், எவரேனும் பொருட்களையோ பணத்தையோ தொலைத்தால் அதை கண்டெடுத்து தம்வசம் வைத்துக்கொள்வது குற்றச்செயல் என குறிப்பிட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.