Header Ads

தாலி கட்டும் நேரம் பார்த்து 5 லட்சம் சீதனம் தாங்க அப்பத்தான் கல்யாணம் நடக்கும் என்ற மாப்பிள்ளைக்கு நேர்ந்ததை பாருங்கள்

ரூபாய் 5 லட்சம் வரதட்சணை கேட்டு மணமகன் திருமணத்தை நிறுத்தியதாக, மணமகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன்: மணமகள் போலீசில் புகார் புது டெல்லி: தெற்கு புது டெல்லி சங்கம் விகார் பகுதியை சேர்ந்தவர் கசாலா ஷீன். 


கசாலாவுக்கும் நொய்டா பகுதியை சேர்ந்த ரஷீது அஹமது அன்சாரி என்பவருக்கும் மார்ச் 25-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் மணமகன் ரஷீது மணமகள் வீட்டாரிடம் ரூபாய் 5 லட்சம் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரஷீது மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் கசாலா புகார் அளித்திருக்கிறார். 


இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் “திருமணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்த பின்னர் திருமணத்திற்கு முதல் நாள் ரஷீது மற்றும் அவரது தந்தை இருவரும் 5 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதாகவும், தொடர்ந்து திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் கசாலா புகார் அளித்துள்ளார்” என்றார். கசாலாவின் வரதட்சணை புகார் தொடர்பாக மணமகன் ரஷீது அவரது குடும்பத்தினரிடம், போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.