Header Ads

BIRTHDAY PARTYயை குழப்பிய தம்பதிக்கு 28 வருட சிறை: அதிரும் அமெரிக்க செய்திகள்



அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் உள்ளது. இன் நிலையில் அங்கே 8 வயது ஆபிரிக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தாரோடு இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடினார். கைலன்(25) மற்றும் ஜோசல்(26) என்னும் தம்பதியினர் அங்கே வந்து பெரும் கலாட்டாவில் ஈடுபட்டார்கள். இது அமெரிக்கா என்றும். உங்கள் நாட்டுக்கு நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என்றும் கூறி. இனத்துவேச வார்த்தைகளால் திட்டியுள்ளார்கள்.

பின்னர் ஒரு சமயம் அவர்கள், காரில் இருந்து ஆயுதங்களை எடுத்துவந்து அக்குடும்பத்தை மிரட்டியுள்ளார்கள். ஜோர்ஜியா மாநிலத்தில் இவர்கள், ஐக்கிய அமெரிக்கா என்ற கழகம் ஒன்றை வைத்திருப்பதாகவும். அதில் வெள்ளையர்களை மட்டும் இணைத்துக்கொண்டு நிறவெறியில், இவர்கள் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து பொலிசார் இவர்கள் மீது வழக்கு பதிவுசெய்தார்கள்.

கைலனுக்கு 20 வருடங்களும் ஜோசலுக்கு 13 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார். தீர்ப்பை கேட்டவுடன் சின்னப் பிள்ளைகள் போல இருவரும் விம்மி விம்மி அழுதுள்ளார்கள் என்பது தான் ஆச்சரியமான விடையம்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.