Header Ads

கிரேக்க மில்லியனர் மகன் ஓட்டிய கார் நெருப்பில் எரிந்த மாயம்: சதி முயற்ச்சியா இல்லை?



கிரேக்க நாட்டில் பல கடைகளை வைத்திருக்கும் பெரும் செல்வந்தர் வக்காகிஸ். இவரது 21 வயது மகன் அமெரிக்காவில் படித்து வருகிறார். இன் நிலையில் விடுமுறைக்காக அவர் தனது சொந்த நாடான கிரேக்கம் சென்று அங்கே அத்தன்ஸ் நகரில் தங்கியிருந்தவேளை. சற்றும் எதிர்பாரதவிதமாக கொல்லப்பட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் மிக விலை உயர்ந்த போஷ் காரை ஓட்டிச் சென்றுள்ளார். 70 மைல் வேகத்தில் செல்லவேண்டிய கார். சுமார் மணிக்கு 120 மைல் வேகத்தில் சென்றுள்ளது.

இதேவேளை மோட்டர்வேயில் இருந்து கார் விலகி, அருகே பார்க செய்து நின்ற காரின் மேல் மோதி தீ பிழம்பாக எரிந்துள்ளது. இதில் செல்வந்தரின் மகன், மேலும் அதில் இருந்த 3 பேரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் எரிந்து கருகிப் போய் உள்ளார்கள். உண்மையில் திடீரென ஏன் இப்படி நடந்தது. குறித்த இளைஞர் மணிக்கு 120 மைல் வேகத்தில் ஏன் காரை செலுத்தினார் என்பது போன்ற விடையங்கள் இதுவரை தமக்கு புரியவில்லை என்றும்.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். செல்வந்தரான வாக்காகிஸ் வருட வருமானம் 666 மில்லியன் பவுண்டுகள் என்று கூறப்படுகிறது. இவருக்கு பின்னார் இவரது வர்த்தக சாம்பிராட்ஜத்தை மகனே கவனித்துக் கொள்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில். இச்சம்பவம் இடம்பெற்றமை பல சந்தேகங்களை கிளப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.