Header Ads

இளம்பெண்களை மிரட்டி அழைத்துச் சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்! அங்கே அறையில் நடந்த சோகம்

லிபியா நாட்டில் அரசுப் படையினருடனான மோதலில் காயமடையும் போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சி கொடுப்பதற்காக செவிலியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


போராளிகளுக்கு மருத்துவ சிகிச்சை பயிற்சி அளிக்க செவிலியர்களை மிரட்டி அழைத்துச் சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் திரிபோலி: சிரியா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர், அண்டை நாடான லிபியாவில் உள்ள சிர்டே பகுதி முழுவதையும் கடந்த 2015-ம் ஆண்டில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 


அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த செவிலியர்கள் அதிகமானோர் பணியாற்றி வந்துள்ளனர். இதனால், போரில் படுகாயமடையும் தீவிரவாதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகளில் பணியாற்றிய செவிலியர்களை கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில் மிரட்டி அழைத்துச் சென்றதாக அவர்கள் பிடியில் இருந்து தப்பி வந்த செவிலியர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். மேலும், கடத்தப்பட்ட செவிலியர்களில் முஸ்லிம்கள் இருந்தால் அவர்களை நிபந்தனைகளுடன் அங்கு தங்க வைத்திருந்ததாகவும், 


அவசர தேவையின் போது அங்குள்ள போராளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பயிற்சிகளை கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும் தப்பி வந்துள்ள செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். சிர்டே பகுதியில் கடந்தாண்டு அரசுப்படையினருடன் ஏற்பட்ட ஐ.எஸ் அமைப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டு பின்வாங்கி விட்டனர். இதனால், அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 


இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ராமமூர்த்தி கோசனம் என்பவரும் ஐ.எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது தப்பி வந்துள்ளார். போர் நடக்கும் பகுதிகளில் ஐ.எஸ் அமைப்பினர் மருத்துவமனைகளை நடத்தி வந்ததாகவும், அங்கு கை, கால்களை இழந்த தீவிரவாதிகளுக்கு தான் சிகிச்சை அளித்ததாகவும் ராமமூர்த்தி தற்போது தெரிவித்துள்ளார்

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.