Header Ads

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த வேலி அமைக்கும் பணியில் பாகிஸ்தான் தீவிரம்

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த எல்லையில் வேலி அமைக்கும் பணியை, பாகிஸ்தான் அரசு தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த வேலி அமைக்கும் பணியில் பாகிஸ்தான் தீவிரம் இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லை வழியாக தீவிரவாதிகள் பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 


சமீபகாலமாக இந்த தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த எல்லையில் வேலி அமைக்கும் பணியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ தலைமையதிகாரி கூறுகையில் “ ஆப்கான் தீவிரவாதிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சுமார் 2500 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது” 


என்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த தூரத்திற்கும் எல்லையமைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.எனினும்,பாகிஸ்தான் நாட்டின் இந்த வேலி அமைக்கும் பணி தொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசு இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.