Header Ads

வங்காளதேசத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடம் இதுதான்! அப்படி உள்ளது என்று பாருங்கள்

வங்காளதேசத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த 5 மாடி கட்டிடத்தின் மீது ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலின்போது அந்த கட்டிடம் தீப்பிடித்தது. வங்காளதேசத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கிய கட்டிடத்தில் தீ விபத்து டாக்கா: வங்காளதேசத்தில் 2013-ம் ஆண்டில் இருந்த மதச்சார்பற்ற ஆர்வலர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் மத சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.


டாக்கா கபே தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. சமீபத்தில் தலைநகர் டாக்கா சர்வதேச விமான நிலையத்தின் அருகில் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். இதையடுத்து, தீவிரவாதிகளை அழிக்கும் பணியை ராணுவம் மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையில் டாக்காவில் இருந்து 236 கிமீ தொலைவில் உள்ள சிலெத் நகரில் உள்ள ஒரு 5 மாடி கட்டிடத்தின் அருகே ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகினர். 


இதையடுத்து அந்த கட்டிடத்திற்குள் சென்று பதுங்கிய தீவிரவாதிகளை, ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் நேற்று 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உள்ளே மேலும் சில தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்து ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்றைய சண்டையின்போது அந்த கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.


அப்போதும் தீவிரவாதிகள் வெளியே வரவில்லை. உடனே மெகாபோன்கள் மூலம் பேசிய அதிகாரிகள், அங்கிருக்கும் தீவிரவாதிகளை சரண் அடையும்படி கூறினர். ஆனால், எந்த பதிலும் வராததால் ராணுவம் முன்னேறிச் சென்று தாக்குதலை தொடங்கியது. அதேசமயம், உள்ளே அபாயகரமான வெடிகுண்டுகளை வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், ராணுவ நடவடிக்கை முடிய தாமதம் ஆவதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்குமிடையே சண்டை நடப்பதால், 2 சதுர கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்கள் நடமாட கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பும் பலப்படுததப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.