Header Ads

இந்தியாவில் பேமசான செம்மர கடத்தலின் ராணி நடிகை சங்கீதா! இவர்களெல்லாம் யார் ? எப்படி நடந்தது ?

போலீசாரிடம் சிக்காமல் ஏமாற்றி வந்த செம்மர கடத்தல் நடிகை சங்கீதா சட்டர்ஜி சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. செம்மர கடத்தல் நடிகை சங்கீதா சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள் நகரி: திருப்பதி அருகே உள்ள சேஷாசல மலைப்பகுதியில் செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துகிறார்கள்.


இதில் சர்வதேச கடத்தல் கும்பல் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பர்மாவைச் சேர்ந்த சர்வதேச கடத்தல்காரன் லட்சுமணனை சித்தூர் போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். லட்சுமணனின் காதலி கொல்கத்தாவைச் சேர்ந்த சங்கீதா சட்டர்ஜி. இவர் விமான பணிப்பெண்ணாகவும், நடிகையாகவும் உள்ளார். 


லட்சுமணன் போலீசில் சிக்கியதால் அவரது செம்மர கடத்தல் தொழிலை சங்கீதா சட்டர்ஜி கவனித்து வந்தார். பலரை துப்பாக்கி முனையில் மிரட்டி செம்மரக்கடத்தலில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அவரை கைது செய்ய ஆந்திர மாநில போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கொல்கத்தாவில் பதுங்கி இருந்த சங்கீதா சட்டர்ஜியை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவரை கொல்கத்தாவில் இருந்து சித்தூருக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 


அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் சித்தூர் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். போலீசாரிடம் சிக்காமல் ஏமாற்றி வந்த சங்கீதா சட்டர்ஜி சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்து உள்ளது. சங்கீதா கொல்கத்தாவில் பதுங்கி இருப்பதை முதலில் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சித்தூர் டி.எஸ்.பி. கிரிதர் தலைமையில் போலீசார் கொல்கத்தாவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர் கொல்கத்தாவில் ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தார். 


ஆடம்பர பிரியையான சங்கீதா சட்டர்ஜி தினமும் போன் மூலம் பீட்சா, பர்கர் ஆகியவற்றை ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைப்பார். இதையடுத்து போலீசார் பீட்சா கொடுப்பது போல் சென்று நோட்டமிட்டனர். பின்னர் பால், செய்தித்தாள் போடுவது போல் மாறு வேடத்தில் சென்று போலீசார் கண்காணித்து வந்தனர். அங்கு சங்கீதா சட்டர்ஜி இருப்பது உறுதி செய்து கொண்டு வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து அவரை கைது செய்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.