Header Ads

பரிஸ் நகரில் ATM இல் காசை எடுக்கவே முடியாது: சுற்றியும் கள்வர்கள் தான்



உலகப் புகழ்பெற்ற பிரான்சின் தலை நகர் பரிசில், கடந்த சில வருடங்களாக வன்முறைகளும், பயங்கரவாத தாக்குதலும் அதிகரித்து வரும் நிலையில். மக்களுக்கு மற்றுமொரு தலைவலி ஆரம்பித்துள்ளது. சிறுவர்கள் பலர் ஏ.ரி.எம் இயந்திரங்கள் இருக்கும் இடத்தை குறிவைத்து நிற்கிறார்கள். அங்கே பணம் பெற்றுகொள்ள வருபவர்களிடம் காசை அடித்துக்கொண்டு அவர்கள் எஸ்கேப் ஆகுவது வழக்கமாகிவிட்டது.

பரிஸ் நகரில் பல இடங்களில் இது போன்று பல சிறுவர்கள் வழிப்பறி கள்வர்களாக மாறியுள்ளமை பெரும் அதிர்ச்சி தரும் விடையம். இதனால் பல இடங்களில் காசை பெற்றுக்கொள்ள பலர் அச்சமடைந்து வருவதோடு வங்கிக்கு உள்ளே சென்று பணத்தை பெற்றுச் செல்கிறார்கள். முன்னேறாத அல்லது மூன்றாம் உலக நாடுகள் என்று கூறப்படும் நாடுகளில் கூட இதுபோன்று நடப்பது தற்போது அரிதாகிவிட்ட நிலையில். பரிஸ் மாநகரில் இது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளது பெரும் வருத்தமளிப்பதாக அங்கு வாழும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இங்கே நடக்கும் ஒரு விடையத்தை பாருங்கள்..


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.