Header Ads

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் இரக்கமற்ற வெறிச்செயல்! தப்பிச் செல்ல முயன்ற தந்தை; கொல்லப்பட்ட குழந்தை

சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து செயற்பட்ட அவுஸ்திரேலியர் ஒருவர், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற குற்றத்துக்காக அவரது குழந்தையை தீவிரவாதிகள் கொலை செய்தனர். சிரியாவில் கூட்டுப்படையினரின் கை ஓங்கியுள்ளது. 


குறு நிலப் பரப்புக்குள் முடங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது என்பதால், தற்கொலைதாரிகளாக மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அச்சமுற்ற குறித்த அவுஸ்திரேலியர், தமது நாட்டின் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகத் தெரியவருகிறது. 


இதையறிந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் அவரது குழந்தையைக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்ட குழந்தையின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் அவுஸ்திரேலிய அட்டர்னி ஜெனரல் ஜோர்ஜ் ப்ரேண்டிஸ், யுத்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அவுஸ்திரேலியர்களுக்கு நீண்ட காலமாக அறிவுறுத்தப்பட்டு வந்த போதிலும், அவற்றை அலட்சியம் செய்பவர்கள், தம்மையும் தம் உறவினர்களையும் வீண் சிக்கல்களில் சிக்க வைத்துவிடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.