Header Ads

சாகடித்த பிள்ளையோடு பஸ்சில் ஏறி: அப்ப தான் குழந்தை செத்தது போல நாடகமாடிய லண்டன் தாய் ...



லண்டன் ஸ்ரட்பேஃட்டில் பஸ் ஒன்றில் 25 வயதான றோசலின் ஏறும் காட்சியும். அவர் பிள்ளை நெஞ்சில் தொங்கிக் கொண்டு இருக்கும் காட்சியும் CCTV கமராவில் பதிவாகியுள்ளது. அது போக அவரது கணவர் வெளியே நின்று எல்லாம் ஓகே தானே என்று பெரு விரலை காட்டி விட்டு செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது. பஸ்சில் ஏறிய றோசலின் திடீரென கூச்சலிட்டு தனது பிள்ளை மூச்சு திணறுவதாக கூறி அழுது ஆர்பாட்டம் செய்ய. பரா மெடிக்ஸ் வைத்தியர்கள் உடனே விரைந்து வந்தார்கள்.

ஆனால் அவர்களால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இவை அனைத்துமே நாடகம் என்பதனை லண்டன் பொலிசார் மிக மிக துல்லியமாக கண்டறிந்தார்கள். பிறந்து 16 வாரங்களே ஆன கைக் குழந்தையை அகோரமாக துன்புறுத்திக் கொலை செய்துள்ளார் றோசலின் மற்றும் அவரது கணவர். இவர்கள் இருவருமே போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். கொல்லப்பட்ட குழந்தையோடு பஸ்சில் ஏறி, அதில் தான் குழந்தை இறந்தது என்று ஒரு நாடகத்தை அரங்கேற்ற இவர்கள் முதலிலேயே திட்டம் தீட்டி இருந்தார்கள்.

அதற்கு அமைவாக தான் கணவர் கையைக் காட்டி கண் அசைத்து சியர்ஸ் செல்லி அங்கிருந்து செல்ல மனைவி பஸ்சில் நாடகம் ஆடி முடித்துள்ளார். தற்போது இருவரும் கம்பி எண்ணுவதோடு, அதிக பட்ச தண்டனையைப் பெற உள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளார்கள். குழந்தையை வளர்க்க முடியவில்லை என்றால் அதனை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் விட்டிருக்கலாம். ஆனால் இவ்வளவு கொடூரமாக அதனை ஏன் கொலை செய்யவேண்டும் என்று பல வாசகார்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.