Header Ads

பிரிட்டன் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் நாங்கள் என்ன செய்வோம் தெரியுமா ? தொழிலாளர் கட்சி மிரட்டல்

பிரிட்டன் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், அரசு கொண்டு வந்துள்ள பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய பிரெக்சிட் கொள்கையை வகுப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது நாங்கள் வெற்றி பெற்றால் தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்வோம்: தொழிலாளர் கட்சி அறிவிப்பு லண்டன்: பிரிட்டனில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. 


தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ல் முடிவடைகிறது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்னரே, அதாவது ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரசா மே முடிவு செய்து நேற்று அறிவிப்பை வெளியிட்டார். 

நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதுதான் ஒரே வழி என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறினார். இதையடுத்து, பொதுத் தேர்தலை ஜூன் 8-ம் தேதி நடத்த அனுமதி அளிக்கும் தீர்மானமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரெக்சிட் தொடர்பான அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஸ்காட்லாந்து சுயாதீனமாக ஒரு பாதையை வகுக்கத் தொடங்கி உள்ள நிலையில், பிரதமரின் இந்த தேர்தல் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்துவிடுவோம் என்று பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. 


அத்துடன், பிரெக்சிட் தொடர்பான புதிய திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. பிரெக்சிட் விஷயங்களைக் கையாளும் தொழிலாளர் கட்சியின் நிழல் மந்திரி கீர் ஸ்டார்மர், லண்டனில் இன்று பேசும்போது, இதனைத் தெரிவித்தார். ‘வரும் பொதுத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த பிரெக்சிட் வெள்ளை அறிக்கையை நாங்கள் நீக்குவோம். பின்னர், நாங்கள் ஏற்கனவே பரிந்துரைத்த 6 முக்கிய விஷயங்களை பிரதிபலிக்கும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய பிரெக்சிட் கொள்கை உருவாக்கப்படும். 


பிரிட்டனில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதே இந்த கொள்கையின் முக்கிய அம்சமாக இருக்கும்.’ என்றார் ஸ்டார்மர். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் பேர் பிரிட்டனில் வசிப்பதாகவும், பிரிட்டனைச் சேர்ந்த 12 லட்சம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளில் வசிப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.