Header Ads

கூகுளில் வேலை செய்யும் சுந்தர் பிச்சையின் ஒரு வருட வருமானம் இத்தனைக் கோடிகளா ? கசிந்தது ரிப்போர்ட்

பிரசித்தி பெற்ற கூகுள் இணைய தள நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தவர் சுந்தர் பிச்சை (வயது 44). தமிழரான இவர் கடந்த 2015&ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு உயர்ந்தார். 


இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6 1/2 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்).ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). 2015-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட தொகையை விட இது இரு மடங்கு ஆகும். 


கூகிளில் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர் சுந்தர் பிச்சை, அந்த நிறுவனத்தின் வருமானத்தை பெருக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. விளம்பர வருவாயும் குவிந்துள்ளது. கடந்த ஆண்டு சுந்தர் பிச்சை தலைமையின்கீழ் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை லாபத்தை வாரி வழங்கி உள்ளன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.