Header Ads

இந்த இளம்பெண்ணின் வீரச் செயல்களை பார்த்தால் உங்களுக்கே கதி கலங்கும்! ஆனால் அவருக்கு இறுதியில் நடந்த சோகம்

கனடாவில் உள்ள டோரன்டோ நகரை சேர்ந்த மரிசா லாசோ என்ற 22 வயதான இளம்பெண்ணை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர். பல அடி உயரம் உள்ள இரும்பு கிரேனில் பல மணி நேரம் தனியாக அமர்ந்திருந்து பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக போலீசார் இவரை கைது செய்தனர். 

இளம்பெண்ணை கைது செய்த பிறகு இவரைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவயது முதல் வீரதீரச்செயல்களில் அதிகளவில் ஆர்வமுடன் பங்கேற்பார் என்றும், திரில்லாக இருப்பதற்காக யாரும் செய்ய முடியாத பல செயல்களை செய்வார் எனவும் தெரியவந்தது. 


நண்பர்கள் சிலரிடம் விசாரணை செய்தபோது. இளம்பெண் ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே படுத்திருப்பது, உயரமான கட்டத்தின் உச்சியில் நிற்பது, மின்கம்பிகளுக்கு மத்தியில் கால்களை தொங்க விட்டவாறு அமர்ந்திருப்பது உள்ளிட்ட புகைப்படங்களை அளித்து போலீசாரிடம் விளக்கியுள்ளனர். இளம்பெண்ணிற்கு துணிச்சல் அதிகமே தவிர பிறருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களில் ஈடுப்பட மாட்டார் என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.


பல மணி நேரம் கிரேனில் அமர்ந்திருந்து இளம்பெண்ணை பற்றி தான் தற்போது கனடாவில் பரபரப்பாக பேசிவருகிறார்கள். போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அப்பெண் சில நிபந்தனைகள் மற்றும் 500 டொலர் பினையாணையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.