Header Ads

இணையத்தில் வெளியான பாகுபலி: அதிர்சியில் உள்ளார்கள் திரைப்பட குழுவினர்



உலகமெங்கும் வெளியாகியுள்ள பிரம்மாண்ட படைப்பான பாகுபலி ௨ திரைப்படம் திரைக்கு வரும் முன்பே இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத் திரையரங்குகளில்  பாகுபலி - 2 வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனால் வெளிநாடுகளில் பாகுபலியை ரிலீஸ் செய்தார்கள்.

இந்நிலையில் இணையத்தில் வெளியாகி,  படக்குழுவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் உள்ள தியேட்டர் ஒன்றில் வைத்தே பாகு பலியை முழு நீள வீடியோவாக எடுத்து. பின்னர் அதனை இணையத்திற்கு கொடுத்துள்ளார்கள் என்று விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்றும். இதுபோன்று பெரும் பட்ஜெட்டில் வரும் படங்களை இணையதில் விடும் குறித்த இணையத்தளங்களை இந்தியாவில் முடக்குவது தொடர்பாக , இந்திய உச்ச நீதிமன்றத்தை தாம் அணுக உள்ளதாகவும் திரைப்பட தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

எனவே இதன் அடிப்படையில் இனி வரும் காலங்களில் குறித்த இணையங்களில் ஐ.பி(IP)  இந்தியாவில் முற்றாக தடைசெய்ய போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். உச்ச நீதிமன்றம் இதற்காக உத்தரவை வழங்கினால் இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.எஸ்.பி நிறுவனங்களும் தடை  விதிக்க நேரிடும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.