துருக்கியில் அரசாங்க வேலை செய்யும் 4 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் வேலை நீக்கம்! எதற்க்காக தெரியுமா ?
ராணுவ புரட்சிக்கு உதவியதாக கூறி துருக்கியில் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
துருக்கியில் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
அங்காரா:
துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவ புரட்சி நடந்தது.
அதை அதிபர் ரீசெப் தய்யிப் எர்டோகன் பொதுமக்கள் உதவியுடன் முறியடித்தார்.
அமெரிக்காவில் தங்கியிருக்கும் மதகுரு பதுல்லா குலென் தூண்டுதலின் பேரில் புரட்சி நடந்ததாக தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து ராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மீது அதிபர் எர்டோகன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே ராணுவம்,
போலீஸ் மற்றும் சிவில் துறைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களில் 1000 பேர் நீதித்துறை அமைச்சகத்தை சேர்ந்தவர்கள்.
அவர்கள் தவிர ராணுவம் மற்றும் விமானப்படை விமானிகள் என 100-க்கும் மேற்பட்டோர் அடங்குவர்.
ஏற்கனவே 9 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு (தற்காலிக நீக்கம்) செய்யப்பட்டுள்ளனர்.
1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அதிக அதிகாரங்களை கைப்பற்ற நாட்டில் அதிபர் ஆட்சி முறையை எர்டோகன் கொண்டுவந்துள்ளார்.
அதற்கான மக்கள் கருத்து வாக்கெடுப்பு கடந்த 1 -ந் தேதி நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்றார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்