Header Ads

தமிழ் பெண்ணின் உடல்: வெள்ளம் அடித்து சென்றதா ? இல்லை தற்கொலையா ?



தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று சடலம் ஒன்று பகல் 1.40 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.

மீட்கப்பட்ட சடலம் சுமார் 55 வயது மதிக்கதக்கதென தெரிவித்த பொலிஸார். குறித்தபெண் அண்மையில் பெய்த மழையினால் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து குளத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட பெண் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.