Header Ads

மீட்புப் பணிக்காக களமிறங்கிய இந்திய போர் கப்பல்! இதுவரையில் எத்தனைபேர் சாவு தெரியுமா ?

இலங்கையின் பல்வேறு பகுதிகளில், கடந்த இரண்டு நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 


கடும் மழையினாலும், மண் சரிவு ஏற்பட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்னபுரி, களுத்துறை, பெல்மடுல்ல உள்ளிட்ட பகுதிகளில் இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால், சுமார் 110 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்த்தப்பட்டுள்ளனர். 


ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மலைப்பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 


இலங்கைக்கு உதவும் வகையில், இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் கிர்ச், போர் கப்பல் மீட்பு பணிக்காக, கொழும்பு விரைந்துள்ளது. அந்த கப்பலுடன், ஹெலிகாப்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து, ஐ.என்.எஸ் ஷர்டுல் கப்பலும், மீட்புப் பணிகளுக்காக, இலங்கை புறப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.