தற்கொலைக்காக தலயில் துப்பகியல் சுட்ட காதலன்! புல்லட் மறுபக்கத்தால் வெளியே வந்து காதலி தலையில் ஏறிய கொடூரம்!!
தற்கொலை செய்ய வாலிபர் சுட்ட குண்டு தலையை துளைத்து காதலி உடலில் பாய்ந்தது. படுகாயம் அடைந்த காதலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தற்கொலை செய்ய வாலிபர் சுட்ட குண்டு தலையை துளைத்து காதலி மீதும் பாய்ந்தது
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அலாஸ் காவில் உள்ள அஞ்சாரேஜ் பகுதியை சேர்ந்தவர் விக்டர் சிப்சன் (21). இவரது காதலி பிரிட்டன் மணீறி (22).
கடந்த மாதம் விக்டர் சிப்சனும் , காதலி பிரிட்டனியும் வெளியே சென்று இருந்தனர். அப்போது மனம் வெறுத்த நிலையில் இருந்த விக்டர் துப்பாக்கியால் தனது தலையில் சுட்டார்.
அப்போது துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு விக்டரின் தலையில் இடது புறத்தில் நுழைந்து வெளியே வந்தது.
பின்னர் அது பின்னால் நின்று கொண்டிருந்த காதலி பிரிட்டனியின் உடலில் பாய்ந்தது.
இதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே படுகாயம் அடைந்த விக்டர் சிகிச்சைப் பின் குணமடைந்தார். இதற்கிடையே காதலியை சுட்டுக்கொன்றதாக விக்டர் கைது செய்யப்பட்டார்.
அவர்மீது கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 99 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்