Header Ads

காலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்..கொலை : தாடி பாலாஜி..?நடிகர் தாடி பாலாஜி வீட்டில் குழப்பம் கும்மி அடிக்கிறது. அவரது மனைவி ஒரு வார இதழுக்கு அளித்த பேடியைப் பார்த்தால் பகீர் என்கிறது.ஆனால் அவரோடு நெருங்கிப் பழகும் சிலர்… பாலாஜி குடிப்பார் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.

பேசும் சம்பளத்திற்கு மறு பேச்சு பேசாமல் வாங்கிக் கொள்பவர் என்கிறார்கள். ஆனால் அவரின் மனைவி அளித்த பேட்டியைப் பாருங்கள்..தினமும் குடித்து விட்டு என்னை அடிப்பார் – நடிகர் பாலாஜியின் மனைவி கண்ணீர் பேட்டி
என் கணவர் பாலாஜி தினமும் குடித்துவிட்டு என்னை அடிப்பார் என அவரின் மனைவி நித்யா பேட்டியளித்துள்ளார்.சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான தாடி பாலாஜி மீது, தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டுவதாக அவரின் மனைவி நித்யா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ஆனால் அவரின் குற்றச்சாட்டை பாலாஜி மறுத்திருந்தார். நானும் எனது மனைவி நித்யாவும் நாங்கள் இருவரும் வெவ்வேறு ஜாதி என தெரிந்து கொண்டுதான் காதலித்துதான் திருமனம் செய்து கொண்டேன்.எனக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகிறது. தற்போது திடீரென நான் ஏன் ஜாதி பற்றி பேசப்போகிறேன்?.குடும்பத்தில் நடக்கும் சிறு பிரச்சனையை ஊதி பெரிதாக்கி, அவர் தன் வசதிக்காக ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக புகார் அளித்துள்ளார். அவரை அவரின் குடும்பத்தினர் தப்பாக வழி நடத்துகிறார்கள்.

இது நம் குடும்ப பிரச்சனை. வா நாம் அமர்ந்து பேசுவோம் என கெஞ்சிப் பார்த்தேன். ஆனால், அவர் ஏற்கவில்லை.நடந்தது நடந்து விட்டது. இப்போதும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை. அவருக்கும் என் மீது பிரியம் இருக்கிறது. கடவுள் எங்களை சேர்த்து வைப்பார். விரைவில் நாங்கள் இணைந்து வாழ்வோம்” என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ள நித்யா “ அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.   ஆனாலும், அவரே என் வாழ்க்கை என வாழ்ந்தேன்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காலை 11 மணிக்கு குடிக்க தொடங்கி மாலை வரை குடிப்பார். அதன் பின் என்னிடம் சண்டை போடுவார். அந்த சண்டை அடுத்த நாள் காலை வரை தொடரும்.மேலும், நான் வேலைக்கு செல்வதால் என் மீது சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பார். கோபம் வந்தால் வீட்டில் இருக்கும் பொருட்களை போட்டு உடைப்பார். என் பெற்றோர் தலையிட்டால் அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்.என்னை அடித்து உதைத்து மாடிப்படிகளில் இருந்து தள்ளிவிட்டார். இதனால் எனது முதுகெலும்பு உடைந்தது. நான் வலியால் துடித்தேன்.

அப்போது கூட அவர் கதவை திறக்கவில்லை. நானாகவே சென்று மருத்துவமனையில் சேர்ந்தேன். ஜாதி பெயர் சொல்லி என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார்.அவருடன் இனிமேல் என்னால் வாழமுடியாது” என அவர் கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்…நம்பவே முடியவில்லை. எல்லோரையும் சிரிக்க வைக்கும் பாலாஜியா இப்படி..? நம்பவே முடியவில்லை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.