Header Ads

விண் வெளியில் புதிய பக்ரீரியா: அப்துல் கலாம் பெயரை வைத்து நாசா மதிப்பளித்தது !



மறைந்த முன் நாள் இந்திய ஜனாதிபதியும், ஒப்பற்ற விஞ்ஞானியுமான, அப்த்துல் கலாம் அவர்களை அமெரிக்கா நாசா விண் வெளி நிலையம் மதிப்பளித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டறியப்பட்ட பக்டீரியா வகையை சேர்ந்த புதிய உயிரினத்திற்கு அப்துல் கலாமின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது.இதில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர். இந்த மிதக்கும் விண்வெளி மையம் பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் அங்கு புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள், இந்த புதிய உயிரினம், பக்டீரியா வடிவம் போன்றது.

இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை.இந்த உயிரினத்திற்கு மறைந்த, டொக்டர் அப்துல் கலாமின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர், அதாவது, சொலிபேசில்லஸ் கலாமி என்று பெயர் வைத்துள்ளனர்.

விண்வெளி அறிவியலில் கலாமின் நிபுணத்துவத்தை நினைவு கூறும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.