லண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்
லண்டனில் உள்ள சில பாடசாலைக்கு வெளியே, மாணவிகளை கடத்தும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 10 தொடக்கம் 14 வயதுக்கு உட்பட்ட மணவிகள் பாடசாலை முடிந்து வெளியே வரும்வேளை அல்லது காலையில் பாடசாலைக்கு செல்லும் வேளையில். வாகனத்தில் வரும் சில நபர்கள் இவர்களை குறிவைத்து கடத்த முயற்ச்சி செய்துள்ளார்கள் என்றும்.
இது சில பள்ளிக்கூடங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஒரு சம்பவத்தோடு மற்றுமொரு சம்பவத்திற்கு தொடர்பில்லை என்றும். இருப்பினும் இனம் தெரியாத கும்பல் ஒன்று மாணவிகளை கடத்த முயற்ச்சி செய்து அது முடியாமல் போகவே தப்பிச் சென்றுள்ளார்கள்.
இதுபோன்ற சம்பவம் சுமார் 3 பள்ளிகளில் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்தே பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். எனவே தமிழர்கள் தமது பெண் பிள்ளைகளை பள்ளி கூட்டிச் செல்வதும். திரும்ப வருவது தொடர்பாக அவதானமாக இருப்பது நல்லது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்