Header Ads

ஒரு பஸ் மீது இப்படி ஒரு தாக்குதலை பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! பஸ்ஸுக்கே இந்த நிலைமை என்றால் மக்களுக்கு ?

எகிப்தில் வீதியில் சென்ற பஸ்ஸின் மீது மர்ம நபர்கள் சிலர் சர­மா­ரி­யாக துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யதில் 28 கிறிஸ்­த­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. கடந்த வெள்­ளிக்­கி­ழமை எகிப்து தலை­ந­க­ர­மான கெய்­ரோவில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள மனியா என்ற நக­ரி­லேயே மேற்­படித் தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. 


அன்பா சாமுவேல் என்ற கிறிஸ்­தவ மடா­ல­யத்­திற்கு பஸ்ஸில் பயணம் செய்­து கொண்டிருந்த போதே சில மர்ம நபர்கள் பஸ் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யுள்­ள­தா­கவும் இதில் 28 பேர் சம்­பவ இடத்­தி­லேயே பலி­யா­கி­யுள்­ள­துடன் 25 பேர் படு­கா­ய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், இதற்கு பதி­லடி கொடுக்கும் வகையில் எகிப்து இரா­ணுவம் ஐ.எஸ். இயக்கம் மீது தாக்­கு­தல்­களை நடத்தத் தொடங்­கி­யது. 


அதன்­படி, லிபி­யாவில் உள்ள ஐ.எஸ் இயக்­கத்­தி­னரின் மறை­வி­டங்­களை குறி­வைத்து வான் தாக்­குதல் நடத்­து­வ­தற்­காக எகிப்து போர் விமா­னங்கள் புறப்­பட்டுச் சென்­றன. இந்த தக­வல்­களை வீடி­யோ­வாக எகிப்து இரா­ணுவ செய்தி தொடர்­பாளர் தாமர் எல்-­ராபே தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்­கத்தில் பதிவு செய்­துள்ளார். முன்­ன­தாக கோப்டிக் கிறிஸ்­த­வர்கள் மீதான தாக்­கு­த­லுக்கு கண்­டனம் தெரி­வித்­தி­ருந்த எகிப்து அதிபர் அப்டெல் பதாஃ எல்-­சிசி தீவி­ர­வா­தி­களின் முகாம்கள் அனைத்­தையும் அழிக்க வேண்டும் என இரா­ணு­வத்­தி­ன­ருக்கு தான் உத்­த­ர­விட்­டி­ருந்­த­தாக தெரி­வித்­தி­ருந்தார். 


அத்துடன் இத்தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 'இரக்கமற்ற படுகொலை’ என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.