Header Ads

சிங்களவர்கள் பேரினவாதிகள்த ராக்கி சிவராம் எடுத்துரைத்தார்! விக்கினேஸ்வரன்

தமிழர்களுக்கான உரிமைகளை சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து பேச்சுவார்த்தையின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியாது என்ற உண்மையை உலகுக்கு எடுத்துரைத்தவர் ஊடகப்போராளி மாமனிதர் தராகி தர்மரட்ணம் சிவராம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


தனி ஒரு தராகியை கொல்வதன் மூலம் அவரின் கொள்கைகளை அழித்துவிடலாம் அல்லது அவ்வழியில் ஈடுபடுகின்ற ஏனைய அங்கத்தவர்களை பீதியடையச் செய்து அடக்கிவிடலாம் என்று எண்ணுவது மிலேச்சத்தனமானது. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இனி;யாவது அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தொரிவித்தார்.


மாமனிதர் தராகி தர்மரட்ணம் சிவராமின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் கிளி.பாரதி ஸ்டார் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தெற்கு ஊடக அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையிலேயே பிரதம விருந்தினரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது சிறப்புரையில் மேற்கண்டவாறு தொரிவித்தார்.


அங்கு அவர் மேலும் தொரிக்கையில் சிவராமின் எழுத்துக்கள் கூடுதலாக ஆய்வு முறையான ஊடகவியலாகவே அமைந்தன. எவ்வகையான நெருக்கடிச் சூழ்நிலைகளிலும் எதற்கும் அஞ்சாது துணிச்சலாக செய்திகளையும் அரசியல் கருத்துக்களையும் முன்வைத்தவர். தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கின்ற பணியில் தன்னை நீண்டகாலமாகவே இணைத்துக் கொண்ட சிவராம் தனது செயலில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்ததுடன் சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அவர் தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார். 


சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து தமிழர்களுக்கான உரிமைகளை எந்தப் பேச்சுவார்த்தையின் மூலமும் பெற்றுக் கொள்ள முடியாது என்ற உண்மையினை உலகுக்கு எடுத்துரைத்து வந்தார். இன்றும் அவ்வாறான சிந்தனையில் நாம் இருந்தாலும் ஆயுதத்தை ஒதுக்கிவைத்து ஆளுமைமிக்க நெருக்குதல்கள் மூலம் நிலைமையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற எண்ணத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ் ஊடகவியலாளர்கள் நவீன தகவல் தொழில்நுட்பத்திலும் தொடர்பாடலிலும் கூடுதலான அறிவை வளர்த்துக் கொண்டு எமது மக்களுக்கெதிரான அரசின் செயற்பாடுகளை உலகிற்கு எடுத்துக்கூறுவதற்கு பின்நிற்கக்கூடாது என்ற கொள்கையில் தராகி இறுக்கமாக இருந்தார். 


அவரது எழுத்து வடிவம் கொலையாளிகளுக்கு மிகுந்த விசனத்தையும் கொலை வெறியையும் தூண்டிவிட்டிருப்பதை தராகி நன்கு அறிந்து வைத்திருந்த போதும் தனது கருத்துக்களை எடுத்துக் கூறுகின்ற நிலைப்பாட்டில் அவர் இறுதிவரை உறுதியுடன் தொடர்ந்து செயற்பட்டமை நன்றியதலுடன் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்படவேண்டிய தொன்றாகும். எமது நாட்டில் பல பத்திரிகையாளர்கள் அரச மிரட்டல்கள், அரச வன்முறை போன்றவற்றிற்குப் பலியாகி வந்துள்ளனர். தராகி அவர்களின் இழப்பு தமிழ் மக்களுக்கு மட்டுமல்லஇ நல்ல மனம் கொண்ட நேர் சிந்தனையுடைய பல சிங்கள மக்களுக்கும் ஒரு பேரிழப்பாக அமைந்துள்ளது. எனினும் அவரின் விடாப்பிடியான கொள்கைகள் எமக்கெல்லாம் கலங்கரை விளக்கமாக விளங்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்நிகழ்வில் இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் மாமனிதர் தராகி ஞாபகாரத்த 'நெருக்கடியான சூழலில் ஊடக்கணிக்கான அர்பணிப்பு விருது மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான ப.அஸ்வின் சுதர்சனுக்கு வழங்க்கட்டது. அதனை அவரது பெற்றோர் பெற்றுகொண்டதுடன் வடக்கு கிழக்கில் நெருக்கடியான சூழலில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் விருதுவழங்கப்பட்ட ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.