Header Ads

மீண்டும் புலிகள்: ராணுவத்தை நோக்கி சுடப்பட்டது இயந்திர துப்பாக்கியே: பெரும் பீதி ஏற்பட்டுள்ளது



பளையில் உள்ள கச்சார் வெளி சந்தியில் வைத்து இன்று(19) அதிகாலை 12.30 மணி அளவில் ராணுவ தொடர் அணி வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெரும் பரபரப்பான பொலிசாரும் ராணுவத்தினரும் அங்கே  நூற்றுக் கணக்கான சக ராணுவத்தை குவித்து தேடுதல் நடத்தி வருகிறார்கள். பற்றை ஒன்றில் இருந்து இயந்திர துப்பாக்கி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ள போதும். வாகனம் மீது ஒரு முறை தான் துப்பாக்கி பிரயோகம் நடந்துள்ளது என்கிறார்கள்.

ஆனால் இவை அனைத்துமே ஒரு பெரிய செட்டப் என்கிறார்கள். நேற்றைய தினம் தடையை மீறி முள்ளிவாய்க்கால் தினம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவு மக்கள் அங்கே கூடி இருந்தார்கள். இதனால் ராணுவத்தின ஏற்கனவே அதிர்ந்து போனார்கள். இதனை அடுத்த முறை நடத்த விடக் கூடாது என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். இன் நிலையில், தமது தொடரணி மீது புலிகள் தாக்குதல் நடத்தியது போலவும். இன்னும் பாதுகாப்பு பிரச்சனை இருப்பது போலவும் ஒரு நாடகத்தை ஆடி முடித்துள்ளார்கள்.

இதனூடாக முகமாலையில் இனி சோதனை சாவடிகள் மீண்டும் முளைக்க கூட வாய்ப்புகள் உள்ளது. இயந்திர துப்பாக்கியால் சுட்ட நபர் ஏன் ஒரு தடவை சுடவேண்டும் ? அப்படியே சுட்டிருந்தால் குறைஞ்சது 2 ஆமிக்காரனாவது இறந்திருப்பான். வாகனத்தின் பின் பக்கமாக ஏன் சுடவேண்டும் ? உண்மையில் சென்றது பொலிசாரா இல்லை ராணுவத்தினரா ? இதுபோன்ற பல கேள்விகள் உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆயுதத்தை ஏன் காட்டவில்லை. இது புதுசா இல்லை பழையதா ? இவை எல்லாமே ஒரு நாடகம். தயாரிப்பு இலங்கை ராணுவமே... 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.