Header Ads

பிரித்தானியாவின் City University of London இல் ஈழப்பிரச்சினை தொடர்பான ஆய்வரங்கம்



இலங்கையில் பொறுப்புக்கூறலும், நல்லிணக்கமும்: உலகளாவிய பரிமாணங்களும், ஒப்பீட்டுப் பார்வைகளும் என்று பொருள்படும் வகையில் Accountability and Reconciliation in Sri Lanka: Global Dynamics and Comparative Perspectives என்ற தலைப்பின் கீழ் வரும் 04.05.2017 வியாழக்கிழமை மாலை 5:30 மணிக்கு அரசறிவியல் ஆய்வரங்கம் இடம்பெறுகின்றது.

ஈழத்தீவில் சமாதானம், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு உலக சமூகம் எடுக்கும் முயற்சிகள் பயனற்றதாகவும், எதிர்மறையாகவும் அமைவதற்கான காரணங்களை இவ் ஆய்வரங்கம் ஆராய்கின்றது. அத்தோடு ஈழத்தீவின் இனப்பிரச்சினையை ஒப்பீட்டுப் பார்வைக்கு உட்படுத்துவதன் மூலம் எவ்வாறான பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதையும் இவ் ஆய்வரங்கம் அலசுகின்றது.

இவ் ஆய்வரங்கில் கலாநிதி மதுரா இராசரத்தினம் (விரிவுரையாளர், City University of London) அவர்களால் எழுதப்பட்ட Tamils and the Nation: India and Sri Lanka Compared என்ற நூலும், கலாநிதி Judith Large (விரிவுரையாளர், University of Kent) அவர்கள் எழுதிய Push Back: Sri Lanka's Dance with Global Governance என்ற நூலும் வெளியிடப்படுகிறது.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி நிகழ்வில் பங்கேற்பதற்கான பதிவை மேற்கொள்ள முடியும்:

Accountability and reconciliation in Sri Lanka: global dynamics and comparative perspectives

2 comments:

  1. 2009ல் தமிழ் இன அழிப்புச்செய்தது சீனா. இதை முதல்மையாக வைத்து ஆராயாத எந்த ஆய்வும் பூரணமானதல்ல. நேர விரய செயல்பாடுகள்.

    ReplyDelete
  2. அப்படியா? அந்த ஆய்வை நீங்கள் ஆங்கிலத்தில் செய்யலாமே?

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.