Header Ads

சற்று முன் லண்டனில் மீண்டும் தாக்குதல்: 12 இஞ்சி கத்தியால் 22 பேரை குத்திய 3 நபர்கள்



சற்று முன் லண்டன் பிரிஜ் க்கு அருகாமையில், தீவிரவாத தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 3 மொராக்கோ நாட்டவர்கள் 12 இஞ்சி கத்திகளை கொண்டு பொதுமக்களை ஓட ஓட தாக்கி குத்தியுள்ளார்கள். இதேவேளை வெள்ளை நிற வேன் ஒன்றையும் அவர்கள் ஓடிச் சென்று மக்கள் மீது இடித்துக் கொல்லவும் முற்பட்டுள்ளார்கள்.

அங்கே பலத்த துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும். தாம் ஓடி தப்பியதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ள நிலையில். ஆயுதம் தாங்கிய பொலிசார் அங்கே குவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சுட்டதில் குறித்த மூவரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனை உறுதி செய்ய முடியவில்லை.

2009ம் ஆண்டு இந்த இடத்தில் தான் ஈழத் தமிழர்கள் போரை நிறுத்துமாறு பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். வரலாறு காணாத வகையில் அங்கே 2 லட்சம் தமிழர்கள் கூடி, பிரித்தானியாவில் ஒரு வரலாற்றை ஏற்படுத்தினார்கள். பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், ஒரு போராட்டத்திற்காக இவ்வளவு தொகையாக கூடியது 2009ல் மட்டுமே. அதனை இன்று வரை எவராலும் மறுக்கவே முடியாது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.