Header Ads

காயானாவில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கை கோளுக்கு நடந்தது என்ன ?

தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. காயானாவில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள் - வெற்றிகரமாக நிலைநிறுத்தம் கெய்னே: தொலைத்தொடர்பு, டிடிஹெச் (DTH) சேவை மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை லத்தீன் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது.


இன்று அதிகாலை 2.29 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. பின்னர் ஜிசாட்-17 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்பட்டது. ஜிசாட்-17 செயற்கைகோள் 3,477 கிலோ எடைகொண்டது. 


இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இது இந்தியாவின் 18வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.