Header Ads

போகும் இடமெல்லாம் மலையை ஆக்கிரமிக்கும் நித்தியானந்தா சீடர்கள்! நேற்று



சென்னை திரிசூலம் அருகே உள்ள கோயில் பாதையை ஆக்கிரமித்த நித்தியாந்தாவின் (nithyananda-disciples-who-invade-mountain) சீடர்களை பொதுமக்கள் அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயில் அருகே பழமை வாய்ந்த பவழக்குன்று மலை உள்ளது. இந்த மலை அடி வாரத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் பல ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்து அங்கு நித்தியானந்தா சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

மேலும், அப்பகுதிக்கு செல்லும் பொதுமக்களையும் விரட்டி அடித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.இது தொடர்பாக திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் மலை பகுதியை ஆய்வு செய்தனர்.அப்போது மலையை ஆக்கிரமித்து அத்துமீறி குடிசைகள் அமைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரமத்தை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் நித்தியானந்தா சீடர்களை மலை பகுதியில் இருந்து வெளியேற்றினார்கள்.இந்நிலையில், திருவண்ணாமலை போன்று சென்னை திரிசூலம் பகுதியிலும் பொது மக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து ஏசியுடன் ஒரு அறையை அமைத்துள்ளனர்.

இந்த தகவல் அப்பகுதி பொதுமக்களுக்கு தெரியவந்ததையடுத்து, நேரடியாக சென்று சீடர்கள் அமைத்த அறையை அடித்து நொறுக்கினார்கள். மேலும், சீடர்களை அடித்து விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் திரிசூலம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.