Header Ads

உளவா பார்க்கிற… யார்கிட்ட..! அமெரிக்கா வைத்த ஆப்பு: வடகொரியா அதிர்ச்சி



வட கொரியா அணு ஆயுத ஏவுகனை சோதனை மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.ஆனால், வடகொரியா தன்னிச்சையாக செயல்படுவதால் மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுத்து வருகிறது. இதனால் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா.

இந்நிலையில் வடகொரியாவின் உளவுத்துறை தலைவரின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கி பயணத்தடையும் விதித்து ஜனாதிபதி கிம் உன்னுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்கா.வடகொரிய ஜனாதிபதி கிம் உன்னுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர் ஜோ இல் யு. இவர் வடகொரியாவின் ரகசிய உளவுத்துறை தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார்.இவரது தலைமையின் கீழ் இயங்கும் அமைப்பு வெளிநாடுகளில் வடகொரியாவுக்கு எதிராக செயல்படுபவர்களை படுகொலை செய்து வருகிறது.

மட்டுமின்றி, ஆட்கடத்தல், அரசியல் படுகொலை என வடகொரியாவுக்கு ஆதரவான நாடுகளுக்காகவும் இவரது அமைப்பு செயல்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.இதனை தொடர்ந்து வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருபகுதியாக வெளிநாடுகளில் ஜோ இல் யுவின் சொத்துக்களை முடக்கியுள்ள அமெரிக்கா, பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா சீனாவின் ஆதரவையும் கோரியுள்ளது. சீனா ஆதரவளிக்கும் என முடிவானதும் மேலும் பல தடைகள் வடகொரியா மீது பாயலாம் என கூறப்படுகிறது.

இதனிடையே வடகொரியாவுக்கு ஆயுதம் வழங்கும் 9 நிறுவனங்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. இதில் இரண்டு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.