Header Ads

லண்டன் ஹரோவில் பெரும் பதற்றம்: மடக்கி பிடிக்கப்பட்ட மர்மான வெள்ளை வேன்...



லண்டன் ஹரோவில் "மஞ்சல் Express உணவகம்" முன்பாக வெள்ளை வேன் ஒன்றை மறைவாக பின் தொடர்ந்து வந்த பொலிசார். அதனை திடீரென மடக்கி, ஓட்டுனர் தப்பி ஓடாதவாறு கிடுக்கி பிடி போட்டார்கள். இருப்பினும் அதன் ஓட்டுனர் கதவை திறந்து பாய்ந்து சென்றுவிட்டார். இதனால் 20க்கும் அதிகமான பொலிஸ் வாகனங்கள் அங்கே வந்து குவிந்துள்ளது. 50 க்கும் அதிகமான பொலிசார் பெரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று, ஹரோவில் அமைந்துள்ள தமிழர் உணவகமான மஞ்சல் எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஹரோ பகுதியில் உள்ள பல இடங்களை பொலிசார் சுற்றிவளைத்து, தப்பிச் சென்ற நபரை தேடி வருவதாக சிலர் தெரிவித்துள்ள அதே வேளை. குறித்த வெள்ளை நிற வேனில் துப்பாக்கி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தார்.

இது தீவிரவாதிகள் பயன்படுத்திய வாகனம் எனவும். துப்பு கிடைத்ததை அடுத்தே பொலிசார் அந்த வாகனத்தை திடீரென மடக்கி பிடித்தாகவும் கூறப்படுகிறது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.