Header Ads

நடிகரிடம் நீ ஓரினச் சேர்க்கையாளனா என கேட்ட நடிகை ஓவியா! விஜய் டிவியில் ஆபாச நிகழ்ச்சி

பிரபல நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் வீட்டில் 15 பிரபலங்கள் தங்கியுள்ளனர். அதில் நடிகை ஓவியா நடந்துகொள்ளும் விதம் நிகழ்ச்சி பார்க்கும் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. 


பிக் பாஸ் வீட்டில் தங்கியுள்ள நடிகர் ஆராவிடம் நடிகை ஓவியா பேசிய காட்சிகளை வெளியிட்டது விஜய் தொலைக்காட்சி. அதில், ஓவியா நடிகர் ஆராவிடம் நீ யாரையாவது காதலித்து இருக்கிறாயா என கேட்கிறார். அதற்கு பதில் அளித்த நடிகர் ஆரர் இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை என கூறுகிறார். 


அதற்கு நடிகை ஓவிய அப்ப நீ என்ன அவனா, ஓரினச் சேர்க்கையாளனா என கேட்ட கேள்வி பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. பின்னர் சரி நீ சும்மா தானே இருக்க எனக்கு லவ் புரொபோஸ் செய், வா காதலிக்கலாம் என அழைக்கிறார் நடிகை ஓவியா. இதனை கேட்ட நடிகர் ஆரார் இதனை எல்லாரும் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் என்ன விட்டுவிடுமா என கூறி தப்பித்து விட்டார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.