Header Ads

செவ்வாய் கிரகத்தில் நடமாடும் பயங்கரங்கள் :போட்டோக்கள் பார்த்து அலறிய நாசா.



சமீபத்தில் கிளம்பிய ஒரு சர்ச்சை இன்னும் அடங்கவில்லை என்று தான் கூற வேண்டும்.வழக்கமாக செவ்வாய் கிரத்திற்கு ஆய்விற்காக அனுப்பட்ட க்யூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படத்தில் தான் ஏதாவது ஒரு மர்ம உருவம் காட்சியளிக்கும். கடந்த முறை க்யூரியாசிட்டி ரோவர் மீதே யாரே ஏறி நிற்பது போல நிழல் உருவ புகைப்படம் ஒன்றை அனுப்பி பெரிய அளவிலான சந்தேகங்களை கிளப்பி இருந்தது.

“பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்” அதே போல அங்க ஏதோ ஒரு உருவம் தெரியுதுல என்று நினைத்துக் கொண்டு பார்த்தால், அங்கு ஒரு உருவம் தெரியத்தான் செய்யும். ஆனால் நாசா விஞ்ஞானிகள் புகைப் படங்களைப் பார்த்து அலறி விட்டார்கள்.

பெண்: செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பெற்ற இந்த புகைப்படத்தில் இருக்கும் உருவம் ஒரு பெண் உருவத்தோடு ஒற்றுப் போவதாக சர்ச்சைகள் கிளம்பின. சரி உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது…?

நண்டு: செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு சார்ந்த நாசா வீடியோ ஒன்றில் ஹெர்மிட் வகை நண்டு போன்ற உருவம் ஒரு கண்டுபிடிக்கப்பட்டது, உங்கள் கண்களுக்கும் நண்டு தெரிகிறதா..? இல்லை வேறு ஏதாவது தோன்றுகிறதா?

தண்ணீர் ஒழுகிய தடம்: செவ்வாய் பரப்பில் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகியதின் மூலம் உண்டான தடம் என்று நம்பப்படும் இது உங்களுக்கு என்னவாக தெரிகிறது?

கரடி: பார்த்த உடனேயே கரடி போன்ற உருவத்தை காட்சிப்படுத்தும் இந்த செவ்வாய் கிரக மேற்பரப்பு பதிவில் உங்களுக்கு வேறேதாவது உருவம் தெரிகிறதா?

உயிரினம்: நாசா வீடியோ பதிவில் சிக்கிய இந்த குகைக்குள் ஏதோ ஒரு உயிரினம் மறைந்து கொண்டு நோட்டமிடுகிறது என்று விவாதிக்கப்படுகிறது. உங்கள் கண்களுக்கும் அவ்வாறே தெரிகிறதா?

புத்தரின் உருவம்: செவ்வாய் கிரகத்தில் கிடைக்கப்பெற்ற மற்றொரு பெண் உருவத்தை தான் நீங்கள் புகைப்படத்தில் பார்க்கிறீர்கள், சிலர் இதை புத்தரின் உருவம் ஒரு கூறுகின்றன. சரி உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது?

குரங்கு: நீளமான வாலுடன் குரங்கு ஒன்று அமர்ந்திருப்பது போன்று காட்சியளிக்கும் இந்த புகைப்படத்தில் உங்களுக்கு குரங்கு உருவம் தெரிகிறதா..??

எலி: இது 3 மீட்டர் நீளமுள்ள செவ்வாய் எலி என்று நம்பப்படுகிறது. எலி தெரிகிறதா..??

ஸ்டோன் ஹெஞ்ச்: இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமான ஸ்டோன் ஹெஞ்ச் போன்றே இருக்கும் இந்த செவ்வாய் கிரக மேற்பரப்பு அமைப்பு உங்களுக்கு வேறு மாதிரியாக காட்சி அளிக்கிறதா?..விபத்தில் சிதறிய பகுதி: இது பறக்கும் ட்ரோன் என்றும், ஏலியன் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த அல்லது விபத்தில் சிதறிய பகுதி என்று நம்பப்படும் இது உங்களுக்கு வெறும் பாறையாக தெரிகிறதா?

டைனோசர் படிவம்: (காட்சி அமைப்பிற்காக வண்ணம் பூசி காட்டப்பட்டுள்ளது) டைனோசர் படிவம் போல தெரிகிறதா?

மனித குரங்கின் முகம்: (காட்சி அமைப்பிற்காக வண்ணம் பூசி காட்டப்பட்டுள்ளது) மனித குரங்கின் முகம் செதுக்கப்பட்ட பாறைகள் புலப்படுகிறதா?

சிலந்தி: செவ்வாய் கிரக பாறைகளுக்கு இடையே உள்ள இது நிச்சயம் ஒரு சிலந்தி வடிவ உயிரினம் தான் என்று இன்று வரையிலாக நம்பப்படுகிறது, உங்களது நம்பிக்கை என்ன..?




No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.