Header Ads

ஹாங்காங்கில் சீன அதிபருக்கு கிடைத்த செருப்படி! தேவையா சார் உங்களுக்கு இந்த அவமானம் ?

சீன அதிபர் சிஜின்பிங் ஹாங்காங்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம். சீன அதிபர் வருகைக்கு ஹாங்காங்கில் கடும் எதிர்ப்பு ஹாங்காங், ஜூன. 27- சீனாவை ஒட்டி உள்ள குட்டி தீவு ஹாங்காங். இது ஆசியாவில் முக்கிய நகரமாகவும் உள்ளது. 


நீண்ட காலமாக ஹாங்காங் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. சீனாவுக்கும், இங்கிலாந்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங் சீனாவிடம் திருப்பி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சீன கட்டுப்பாட்டில் உள்ள தனி அதிகாரம் கொண்ட நாடாக ஹாங்காங் செயல்பட்டு வருகிறது. ஆனாலும் ஹாங்காங் மக்களிடம் சீனாவுக்கு எதிரான மனநிலை உள்ளது. அவர்கள் ஹாங்காங்கில் சீனா ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை. இந்த நிலையில் சீன அதிபர் சிஜின்பிங் ஹாங்காங்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 


அவர் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள், வக்கீல்கள் போன்றவர்கள் இந்த போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்றனர். அவர்களில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சீன அதிபர் கடைசியாக 2013-ம் ஆண்டு ஹாங்காங்கில் சுற்றுப்பயணம் செய்தார். அதன்பிறகு 4 ஆண்டு கழித்து சீன அதிபர் அங்கு சுற்றுப்பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.