Header Ads

அழியப்போகும் இந்திய ராணுவம்! சீனாவின் அதிரடி! நடக்கபோவது என்ன ?

சிக்கிம் மாநிலத்தில் உள்ள தங்கள் நாட்டு எல்லைப் பகுதிக்குள் இந்திய ராணுவம் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டியுள்ள சீன அரசு இதுதொடர்பாக இந்தியாவிடம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. சிக்கிம் பகுதி எல்லைக்குள் நுழைந்த இந்திய ராணுவம்: சீனா கடும் கண்டனம் பீஜிங்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகியவை சீன நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 


இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கோடு அருகே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததோடு, அங்கிருந்த இரண்டு பதுங்குகுழிகளையும் அழித்ததாக இந்திய ராணுவம் நேற்று குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில், எல்லை தாண்டி ஊடுருவியதாக கூறிய இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீன ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜெங் ஷாங் வெளியிட்டு இருந்த அறிக்கையில், சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தான் ஊடுருவி வந்ததாக தெரிவித்தார். சிக்கிம் மாநிலத்தின் ஓரம் தங்கள் நாட்டு எல்லைப்பகுதிக்குள் ஊடுருவிய இந்திய படைகள் அங்கு கட்டிடம் ஒன்றை கட்டி வருவதாகவும் சீன அரசு இன்று குற்றம்சாட்டியுள்ளது. 


இந்தியாவின் இந்த அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் திபெத் பகுதியில் உள்ள மானசரோவர் ஆலயத்துக்கு இந்தியாவில் இருந்து யாத்திரை செய்ய சென்ற பக்தர்களை தடுத்து நிறுத்தியதாகவும் சீனா இன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, சிக்கிம் எல்லைப்பகுதியில் யாத்ரீகர்கள் நடந்து செல்லும் பாதை பாதுகாப்பாக இல்லாததால் நாது லா கனவாய் வழியாக மானசரோவர் செல்லும் 47 இந்திய யாத்ரீகர்களை அனுமதிக்க முடியாது என்று சீனா மழுப்பி இருந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும், புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் மூலமாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு சீனா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 


இதுதொடர்பாக, சீன தலைநகர் பீஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லு காங், ‘எல்லைப்பகுதியில் எங்கள் நாட்டின் இறையாண்மையை நிலைநிறுத்திக் கொள்ளும் சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதே வகையில் இந்தியாவும் செயல்படும் வகையில் எங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ஊடுருவி இருக்கும் தங்கள் நாட்டு ராணுவத்தினரை இந்தியா திரும்பப்பெற வேண்டும். இந்த அத்துமீறல் தொடர்பாக, விரிவான விசாரணைக்கும் இந்திய அரசு முன்வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.