Header Ads

ஹிலாரி கிளின்டனின் மகள் இப்படிபட்டவரா ? பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கூறியதை பாருங்கள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டனின் மகள் செல்சியாவை பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ராணுவ வீரர்களின் நிகழ்ச்சி ஒன்றில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ரொட்ரிகோ பங்கேற்றுள்ளார். 


அப்போது, ‘ஒவ்வொரு வீரரும் 3 பெண்கள் வரை கற்பழித்துக்கொள்ளலாம். தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்ற பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் இக்கருத்திற்கு கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து ‘நகைச்சுவைக்காக தான் அவ்வாறு கூறினேன்’ என ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார். ஜனாதிபதியின் இக்கருத்தை உலக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். 


பில் கிளிண்டன் - ஹிலாரி தம்பதியின் மகளான செல்சியா தனது டிவிட்டர் பக்கத்தில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘பெண்களை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதி பேசியுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதில் நகைச்சுவை எதுவும் இல்லை. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மிகவும் மோசமானவர் என விமர்சனம் செய்துள்ளார். செல்சியாவின் கருத்திற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ரொட்ரிகோ இன்று பதிலடி கொடுத்துள்ளார். 


அதில், ‘செல்சியாவின் தந்தையான பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது மோனிகாவுடன் உறவுக்கொண்டார். இதை செல்சியா எப்படி உணர்ந்தார்? இதற்காக, அவர் தனது தந்தையை கண்டித்தாரா? வெள்ளை மாளிகையில் இருந்த பெண்களுடனும் பில் கிளிண்டன் உறவுக்கொண்டார். இது மட்டும் சரியானதா?’ என ரொட்ரிகோ பதிலடி கொடுத்துள்ளார். ஜனாதிபதியின் பதிலுக்கும் செல்சியா இதுவரை பதில் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.