Header Ads

திருமணமாகி எட்டு மாதம்தான்!! வயதும் 19 தான்! இப்படி செய்யலாமா இந்தப்பெண்ணை?? அதிர்ச்சிப் பின்னணி

வாணியம்பாடி அருகே புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். அவரின் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடி அருகே புதுப்பெண் மர்ம மரணம்: போலீசார் விசாரணை சுமித்ரா வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே உள்ள அரபாண்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், மெக்கானிக். 


இவருடைய மனைவி சுமித்ரா (வயது 19). இருவருக்கும், 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர், சுமித்ராவிடம் உன் தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி கூறி, அடித்துத் துரத்தி வந்துள்ளார். இந்தச் சம்பவம் பல நாட்களாக நடந்துள்ளது. அதேபோல், நேற்றும் வரதட்சணை கொடுமை தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இளம்பெண்ணான சுமித்ரா தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். 


இதுபற்றி சுமித்ராவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தைக் கேள்விப்பட்ட பெண் வீட்டார், அரபாண்டகுப்பம் கிராமத்துக்கு வந்து, சசிகுமாரின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். வீட்டு உபயோக பொருட்களை வெளியே தூக்கிப்போட்டு தீ வைத்தனர். அப்போது அவர்கள், சுமித்ராவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்தால் தான் பிணத்தை எடுத்துச் செல்வோம் எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர்.


இதுபற்றி தகவல் அறிந்ததும், அம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். சசிகுமார், அவரின் தாயார் வளர்மதி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தந்தை கண்ணன் தலைமறைவாகி விட்டார். மர்மச்சாவாக அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


சுமித்ராவின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக திருப்பத்தூர் சப்-கலெக்டர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.