Header Ads

வாங்கிய 1 மணி நேரத்துக்குள் மோதி நொறுங்கிய உயர் பெறுமதியான கார் இது!! என்ன விலை தெரியுமா ?

இங்கிலாந்தில் அதிநவீன சொகுசு கார் ஒன்று விலைக்கு வாங்கிய 1 மணி நேரத்தில் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. விபத்துகுள்ளான கார் ‘பேஸ்புக்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பாக பேசப்படுகிறது. வாங்கிய 1 மணி நேரத்துக்குள் மோதி நொறுங்கிய ரூ.2 கோடி சூப்பர் கார் லண்டன்: இங்கிலாந்தில் தெற்கு யார்க்க்ஷைர் பகுதியில் ‘பெராரி 430 ஸ்கடேரியர் என்ற சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியது. 


அதனால் அந்த கார் சுக்கு நூறாக நொறுங்கி தீப்பிடித்தது. தெற்கு யார்க்ஷிர் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்து என்பது எதிர்பாராதவிதமாக நடப்பதுதான். ஆனால் இந்த விபத்து மிகவும் வித்தியாசமானது. இந்த அதிநவீன சொகுசு காரின் விலை ரூ.2 கோடி. அந்த கார் விபத்து நடப்பதற்கு சுமார் 1 மணி நேரத்துக்கு முன்புதான் விலைக்கு வாங்கப்பட்டது. அந்த காரை ஷோரூமில் இருந்து டெலிவரி எடுத்து டிரைவர் ஓட்டி வந்தார். 


அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இந்த விபத்தில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் ரூ.2 கோடிக்கு வாங்கிய புத்தம் புதிய கார் கடும் சேதம் அடைந்தது. அது வெறும் ரூ.50 ஆயிரத்துக்கு மட்டுமே விற்கப்பட்டது. இந்த கார் நொறுங்கி கிடக்கும் காட்சி ‘பேஸ்புக்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.