Header Ads

இளஞ்செழியனை சுட்டது விடுதலைப் புலிகளின் மக்கள் படையை சேர்ந்த நபர் !



பல கட்டப் பஞ்சாயத்து.  இந்த கட்ட பஞ்சாயத்து செய்யப் போய் தான் துப்பாக்கி சூடு நடந்தது என்றால் நம்புவீர்களா ? வேறு ஒரு தொடர்பும் இல்லை. உண்மையில் என்ன நடந்தது என்பதனை அதிர்வின் புலனாய்வு நிருபர் கண்டறிந்துள்ளார் !

யாழில் நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு என்றும். இது ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்றும் பல மீடியாக்கள் செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளது. யாழில் அதிரடிப்படை குவிப்பு. என்று மறு முனையில் செய்தி வெளியாகியுள்ள நிலையில் , வித்தியா கொலை வழக்கை விசாரிக்கும் இளஞ்செழியனுக்கு ஆபத்து என்கிறார்கள். ஆனால் நடந்தது இதுதான். நேற்றைய தினம், நல்லூர் பின் வீதியில் அவரது இல்லாம் நோக்கி நீதிபதி இளஞ்செழியன் காரில் சென்றுள்ளார். அவர் செல்லும் வேளை அவருக்கு பாதுகாப்பு கொடுக்க மோட்டார் சைக்கிள் பொலிசார் செல்வது வழக்கம்.

நல்லூர் பின் வீதியில் உள்ள பழக் கடை ஒன்றில், அந்த முதலாளியோடு ஒருவர் குடித்து விட்டு தகறாறில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த இளஞ்செழியன் அங்கே என்ன நடக்கிறது என்று போய் பார்க்குமாறு கூறியதோடு , தானும் இறங்கிச் சென்றுள்ளார். குறித்த நபர் முன்னர் விடுதலைப் புலிகள் மக்கள் படையில் இருந்துள்ளார். 2009ம் ஆண்டுக்குப் பின்னர் அவர் யாழில் வசித்து வருகிறார். இந்த வெறிக்குட்டி சற்றும் எதிர்பாரத விதமாக பொலிஸாரின் கை துப்பாக்கியை பறித்து. லாக்- எடுத்து விட்டு சுட்டுள்ளார்.

அவர் சுட்டது இளஞ்செழியனை அல்ல. வெறியில் எங்கே சுடுகிறோம் என்று தெரியாமல் சுட்டுள்ளார். ஆனால் இதனை எதிர்பாராமல் காரில் இருந்து இறங்கிச் சென்ற இளஞ்செழியன் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவர் மீது துப்பாக்கி ரவை பாயக் கூடாது என்று அவரது மெய் பாதுகாப்பாளர்கள் முயன்றது உண்மையே. அதாவது நீதிபதி இளஞ்செழியன் மீது இது போன்ற சில குற்றச்சாட்டுகள் உள்ளது. கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவது. நீதிமன்றத்திற்கு வெளியே வழக்குகளை தீர்ப்பது என்பது போன்ற சில விடையங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பொலிசார் அங்கே வந்தவேளை, அவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுவே உண்மை சம்பவம்  ஆகும்.

ஒரு நீதிபதி என்பவன் நீதிமன்றில் மட்டுமே வழக்கை விசாரிக்கவேண்டும். நீதிமன்றம் தவிர்ந்த ஏனைய இடங்களில் அவர், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுவது என்பது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம். வெறியில் நின்ற முன் நாள் மக்கள் படை நபர் தப்பியோடி விட்டார். பயிற்ச்சி எடுத்த ஆள் தானே , லாவகமாக தப்பியோடியுள்ளார். ஆனால் பழக்கடை உரிமையாளரை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். 

3 comments:

  1. He had every right to enforce discipline anywhere any time that's his oath and duty.

    ReplyDelete
  2. கண்ட இடங்களில் கட்ட பஞ்சாயத்து செய்ய முடியுமா ? ரோட்டில் அடி தடி என்றால் தட்டிக் கேட்க்க வேண்டியது பொலிஸ். அவர்கள் நீதிமன்றில் நிறுத்தினால் அதனை விசாரிக்கவேண்டியவர் நீதிபதி என்பது சட்டம்.

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.